யூடியூபுடன் நேரடியாகப் போட்டி போடும் பேஸ்புக்: புதிய சேவை அறிமுகம்

யூடியூப் தளத்துடன் நேரடியாகப் போட்டி போடும் வகையில் பேஸ்புக் நிறுவனம் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இன்டர்நெட் சந்தையில் அதன் முக்கியத்துவம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷக்கர்பெர்க் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக், யூடியூப் சேவைக்கு போட்டியாக வீடியோ தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

பேஸ்புக் மொபைல், டெஸ்க்டாப், பேஸ்புக் டிவி செயலிகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சிறிய ரக வீடியோக்களை புதிய சேவையில் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு வழங்க பேஸ்புக் திட்டமிட்டுள்ளது.

வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை அறிமுகம் செய்வதன் மூலம் அமேசான் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற சேவைகளுக்கு பேஸ்புக் நேரடிப் போட்டியாக அமைந்துள்ளது.

பேஸ்புக் வாட்ச் அம்சத்தில் அதிகம் விவாதிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வீடியோக்களை “Most Talked About” என்ற தலைப்பில் வழங்குகிறது.
இதேபோல், மக்கள் அதிகம் ஹாஹா (Haha) Reaction வழங்கிய வீடியோக்களையும் பேஸ்புக்கில் உங்களது நண்பர்கள் எதுபோன்ற வீடியோக்களைப் பார்க்கின்றனர் என்பதையும் தனி அம்சமாக வழங்குகிறது.

பேஸ்புக் வாட்ச் சேவையில் பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்கள் உள்ளிட்டவை சேர்க்கப்படவுள்ளன.

வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யும் புதிய அம்சம் பேஸ்புக் நிறுவனத்தின் வருவாயை மேலும் அதிகரிக்க வழி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்