புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான முகாம் அமைக்கும் பணி நிறைவு

அமெரிக்காவிலிருந்து கனடாவில் தஞ்சம் கோருவோரை தங்க வைப்பதற்காக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவந்த கூடாரங்கள் அமைக்கும் பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவிலிருந்து தஞ்சம் கோரி கனடாவிற்குள் வரும் சுமார் நூற்றுக்கணக்கானவர்களை தங்கவைக்கும் வகையில் பல கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க- கனேடி எல்லை ஊடாக சட்டவிரோத பயணம் மேற்கொண்டு கியூபெக்கில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 200 என்ற எண்ணிக்கையையும் தாண்டியுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த அரையாண்டு காலத்தில் இதுவரை சுமார் 4 ஆயிரத்து 300இற்கும் அதிகமானோர் தஞ்சம் கோரி நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்றவாசிகள் தொடர்பான கடுமையான நிலைப்பாட்டின் எதிரொலியாகவே, பெரும்பாலான ஹெய்ட்டி மக்கள் இவ்வாறு கனடாவில் தஞ்சம் கோரி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்