ஐ.எஸ் பயங்கரவாதிகளால் பிரித்தானியாவுக்கு உள்ள அச்சுறுத்தல்கள் தொடரும்!

ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து பிரித்தானியாவுக்குள்ள அச்சுறுத்தல்கள் இன்னும் 20 தொடக்கம் 30 வருடங்களுக்கு தொடரும் என MI5 புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் இவென்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் அச்சறுத்தல் தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) பி.பி.சி சேவையால் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரித்தானியாவில் இணையத் தாக்குதல் நடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டுமானால் இணைய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரித்தானியாவின் ஜனநாயகத்தில் ரஷ்யா தலையீடு செய்ய முயற்சிக்கலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்