கிணற்றில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு

திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில், கிணற்றில் மூழ்கி சிறுவர்கள் இருவர், உயிரிழந்துள்ளனர் என்று உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

தீர்வைநகரைச் சேர்ந்த எம்.ஹேமதரன் (வயது-16) மற்றும் ஆனந்தபுரியைச் சேர்ந்த கே.புவிராஜ் (வயது-15) ஆகிய இருவருமே, இவ்வாறு கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் இன்று பகல், ஆனந்தபுரியிலுள்ள பொதுக் கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றபோதே, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், உப்புவெளிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்