போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியின் மோட்டார் சைக்கிள் கொள்ளை:

வவுனியா, குருமன்காடு சந்திப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளை நபரொருவர் திருடிச் செல்லும் காட்சி அப்பகுதியிலிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

நேற்று பிற்பகல் 1.28 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குருமன்காடு சந்திப்பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றுக்கு சிவில் உடையில் வந்த பொலிஸ் அதிகாரி, தனது மோட்டார் சைக்கிளை குறித்த கடையின் முன்பாக நிறுத்தி விட்டு பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.
மீண்டும் வந்து பார்த்த மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவை பரிசோதித்த போது நபரொருவர் குறித்த மோட்டார் சைக்கிளை ஹெல்மட் இன்றி மன்னார் வீதி வழியாக செலுத்திச் செல்கின்றமை பதிவாகியுள்ளது.
இதனை அடிப்படையாக வைத்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதேவேளை, குறித்த பகுதியில் சம்பவ நேரத்தில் போக்குவரத்து பொலிஸார் இருவர் கடமையில் நின்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்