பெண்கள் உள்பட 7 ஆயிரம் இந்தியர்கள் வெளிநாடு சிறைகளில் தவிப்பு

பெண்கள் உள்பட 7 ஆயிரம் இந்தியர்கள் வெளிநாடு சிறைகளில் தவிப்பு

வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் இந்தியர்கள் 7,620 பேர் அடைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் உறுப்பினர்களின் வினாவுக்கு விடையளித்த அவர், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 86 சிறைகளில் இந்தியர்கள் 7620 பேர் அடைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 50 பேர் பெண்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

56 விழுக்காட்டினர் வளைகுடா நாடுகளின் சிறைகளில் உள்ளனர், சவூதி அரேபியசிறைகளில் மட்டும் 2084 பேர் உள்ளனர். இவர்களில் மது விற்றதற்காகவும் மது அருந்தியதற்காகவும் சிறைப்பட்டவர்களே அதிகம்.

தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமாக ஆட்கடத்தல், விசா விதிமுறைகள் மீறல் ஆகிய குற்றங்களின் பேரில் 500க்கு மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் சிறைகளில் 546 பேர் உள்ளனர். இவர்களில் 500பேர் மீனவர்கள். தமிழகம் கேரளத்தைச் சேர்ந்த பலர் மீன்பிடித்ததற்காக இலங்கை, வங்க தேசம், புருனே, எத்தியோப்பியா ஆகிய நாட்டுச் சிறைகளில் உள்ளனர் என எம்.ஜே. அக்பர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்