பிரத்தியேக பொலிஸ் பிரிவு:திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு எதிராக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரத்தியேக பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென் மாகாண அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

பாதாள கும்பலையும் போதைப்பொருள் வியாபாரத்தையும் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் பாதாள உலகத்தினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் அதிகரித்துள்ளார்கள். அல்லது சுதந்திரமாக செயற்படுகின்றார்கள் என கூட்டு எதிர்க் கட்சியினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுளளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்