சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த மூன்று இந்தியர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த மூன்று தமிழக இளைஞர்கள் கைது செய்யபபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தின் சாரதிகளாக பணியாற்றிக் கொண்டிருந்த போது  கைது செய்யப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இவர்கள் சம்மாந்துறை மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதோடு, இவர்கள் இன்று சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்