டெலோ உறுப்பினர்கள் வவுனியாவில் கலந்துரையாடல்

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) முக்கிய  தீர்மானங்களை  எடுக்கும் நோக்கோடு இன்று வவுனியாவில் கூடியுள்ளது.

வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுபினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

இதன் போது வட மாகாண அமைச்சராக உள்ள டெலோவை சேர்ந்த பா.டெனிஸ்வரன் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும்,  சம கால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக, கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இந்த நிலையில் கூட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் வெளிநாட்டு அலுவலக பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்