நடிகை கவுதமி முதல் கணவரை விடுத்தது ஏன் கமலோடு சேர்ந்தார்..? எதனால் பிரிந்தார்…?

ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்தான் நடிகை கவுதமி. இவர் 1987 -ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தயமாயுடு என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.

பின்னர் 1988 -ம் ஆண்டு தமிழில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த குருசிஷ்யன் படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் கமலஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் சேர்ந்து நடித்தபோது இருவருக்குமிடையே நல்ல நட்பு ஏற்பட்டது.

1998 -ல் சந்தீப் பாட்டியா என்ற தொழில் அதிபரை நடிகை கவுதமி காதல் திருமணம் செய்து கொண்டார். 1999 -ம் ஆண்டு அவருக்கு சுப்புலட்சுமி என்கிற பெண் குழந்தை பிறந்தது.

ஆனால், அதே வருடத்தில் அவரின் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தார். மேலும், அவரிடம் இருந்து விவாகரத்தும் பெற்றார்.

சில நாட்கள் களைத்து கவுதமியின் பெற்றோர் மரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து, சில நாட்கள் தன்னுடைய மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

அதன்பிறகு, நடிகர் கமலஹாசனுடன் கவுதமிக்கு இருந்த நட்பு காதலாக மாறி இருவரும் கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.

சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக இருவரும் சேர்ந்து வாழ்ந்துவந்தனர். பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கவுதமி நடிகர் கமலை விட்டு பிரிந்து விட்டார்.

இதற்கு காரணமாக, தன்னுடைய மகளின் நலன் கருதிதான் தான் கமலை பிரிந்ததாக கவுதமி தெரிவித்தார். தற்போது நடிகை கவுதமி தன் மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்