பிக் பாஸ் கேட்ட கேள்வியால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கட்டிப்புடி கவிஞர்..!

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது.

ஆனால், தற்போது நடிகை ஓவியா மற்றும் ஜூலி இல்லாததால் எந்தவித சண்டையும் இல்லாமல் அமைதியாக செல்வதால், நிகழ்ச்சியை வெறுக்கத் தொடங்கிள்ளனர்.

ஏற்கனவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது யார் தெரியாமல் தாயுமானவர் என்று ஜூலி கூறியிருந்தார். அது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் மீண்டும் அதே பாணியில் தமிழ் உணர்வை தூண்டி பரபரப்பை ஏற்படுத்த பிக் பாஸ் முடிவு செய்துள்ளது.

அதன்படி இந்த முறை சிக்கியது கவிஞர் சினேகன். அவரிடம் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியது யார் என்று பிக் பாஸ் கேட்டுள்ளது.

அதற்கு அவர் நீண்ட நேரம் யோசித்துவிட்டு, தாயுமானவர் என்று தவறான பதிலையே கூறியுள்ளார்.

இதனால், பிக் பாஸ் திட்டப்படி பார்வையாளர்கள் சோஷியல் மீடியாக்களில் வறுத்தெடுத்த ஆரம்பித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்