‘சர்வைவா’ லைக்குகளைக் கடந்த ‘ஆளப் போறான் தமிழன்’

 

சமூக வலைத்தளங்களையும் உள்ளடக்கிய டிஜிட்டல் தளங்களில் யார் சாதனைகளைப் புரிவது என்பதில் விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் எப்போதுமே கடும் போட்டி இருக்கும். அஜித் ரசிகர்களுக்கு எப்போதுமே தாங்கள்தான் முன்னணியில் இருக்கிறோம் என்ற நினைப்பு இருக்கும். அப்படி அவர்கள் ஒவ்வொரு முறை சாதனை புரியும் போதும், அதை அடுத்து விஜய் ரசிகர்கள் முறியடிப்பதும் வழக்கமாக இருக்கும்.

‘விவேகம்’ படத்தின் சிங்கிள் பாடலான ‘சர்வைவா’ பாடல் வெளிவந்ததும் அந்தப் பாடலை அதிகப் பார்வைகள், லைக்குகள் என சாதனை புரிய வைத்தார்கள். இப்போது அந்த சாதனையை ‘மெர்சல்’ படத்தின் சிங்கிள் பாடலான ‘ஆளப் போறான் தமிழன்’ பாடல் முறியடித்திருக்கிறது. இதன் லிரிக் வீடியோவை நேற்று மாலை யு டியூபில் வெளியிட்டார்கள்.

இன்று காலை வரை இந்த லிரிக் வீடியோவை 9 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். 1 லட்சத்து 5 ஆயிரம் பேர் லைக் செய்திருக்கிறார்கள். ‘சர்வைவா’ சிங்கிள் வெளியான போது இதே காலகட்டத்தில் 8 லட்சம் பேர் மட்டுமே பார்த்திருந்தார்கள். 90 ஆயிரம் பேர் மட்டுமே லைக் செய்திருந்தார்கள்.

அது மட்டுமல்ல ‘சர்வைவா’ பாடல் டீசருக்கு யு டியூபில் கடந்த இரண்டு மாத காலங்களில் 40 லட்சம் பார்வைகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. 1 லட்சத்து 36 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளன. ஆனால், ‘ஆளப் போறான்’ பாடல் டீசருக்கு இரண்டே நாட்களில் 35 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. 1 லட்சத்து 79 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளன.

அஜித் ரசிகர்கள் எந்த சாதனை செய்தாலும் அதை மிக விரைவில் முறியடிப்பதை விஜய் ரசிகர்கள் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்