100 மொழிகளில் அகராதி வெளியிடும் திட்டத்தில் “தமிழ்” மொழிக்கென்று தனி அகராதி..!!

தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்: 100 மொழிகளில் அகராதி வெளியிடும் திட்டத்தில் “தமிழ்” மொழிக்கென்று தனி அகராதி..!!

 

தமிழ் மொழி சொற்களஞ்சியம் என வரும்போதும், அகராதி நூற்கள் எனும் போதும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு முயற்சி என்பது இதுவரை நடைபெற்றதாக அறியப்படவில்லை.

தனிப்பட்ட வகையில் சில இயக்கங்களும், தனி நபர்களும் சீர்திருத்த விரும்பிகளும் செய்த, செய்கின்ற முயற்சிகள் மட்டுமே தொடர்கின்றன.

ஒரு இனத்தின் மொழி​, காலத்திற்கேற்ற வகையில் புதிய சொற்களுக்கானத் தேவை ஏற்படும் போது அதனை உருவாக்கும் முயற்சி என்பதை ஒரு தனி நபர் அல்லது இயக்கம் என்பது செய்வதை விட,

அரசின் மொழி வளார்ச்சித்துறை இதனை முழுப்பொறுப்பு ஏற்றுக் கொண்டு செய்வதே சாலச்சிறந்த பணியாக அமையும்.

தமிழர், தமிழ், என்ற ரீதியில் பல தரப்பட்ட வல்லுனர்களை உள்ளடக்கிய ஒரு குழு ஒன்று தமிழ் மொழி வளர்ச்சித் துறையினால் முன்னெடுக்கப்பட்டு படிப்படியான காத்திரமான பணிகள் நடைபெற வேண்டும்.

அது நல்ல முறையில் தமிழ் மொழி காலத்திற்கேற்ற மாற்றங்களையும் உள்வாங்கிய, அறிவியல், வணிகம், சுற்றுச்சூழல் எனப் பல தரப்பட்ட தேவைகளை உட்புகுத்தி வளம் கொண்டு வளர்ச்சியுறும் மொழியாக வளர உதவும்.

தனி நபர் முயற்சியில் வெளிவந்த அகராதிகள், பல்கலைக்கழகம் அல்லது கல்வி அமைப்புக்களின் அகராதி என சிலவற்றைக் காண்கின்றோம்.

இவற்றில் ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபடும் நிலையைக் காண்கின்றோம். இவை குழப்பத்தைச் சில வேளைகளில் ஏற்படுத்துகின்றன.

ஆக, அரசின் மொழி வளர்ச்சித்துறை என்பது நேரடியாக ஈடுபட்டு இப்பணியைச்சரியான திட்டமிடுதலுடனும்,

தரமான வல்லுனர்களைக் கொண்ட குழுவினை அமைத்துச் செய்யும் வேளையில் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு என்ற நோக்கத்திற்கு நன்மை பயக்கும்.

இதன் ஒரு படியாக, உலக மொழிகளில் சொற்களஞ்சிய அகராதிகளை உருவாக்கிவரும் ஆக்ஸ்போட் பல்கலைக்கழகம் தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் விதமாக ஆக்ஸ்போட் தமிழ் இணைய அகராதியை வெளியிட்டுள்ளது.

உலக மொழிகளுக்கான சொற்களஞ்சிய வளங்களை உருவாக்கும் முயற்சியின் அங்கமாக இந்திய மொழிகளில் அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறது ஆக்ஸ்போர்டு அகராதி உருவாக்கும் குழு.

உலகத்திலுள்ள 100 மொழிகளில் அகராதிகளை உருவாக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ள ஆக்ஸ்போட் பல்கலைக்கழகம், முதலில் இந்திய மொழிகளில் ஹிந்தி மொழியில் அகராதியை வெளியிட்டது.

தற்போது தமிழ், மற்றும் குஜராத்தி மொழிகளில் அகராதிகளை வெளியிட்டுள்ளது.

அகராதியை பார்க்க விரும்புபவர்கள் https://ta.oxforddictionaries.com/ இந்த லிங்கில் சென்று பார்வையிடலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்