‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பு நிறைவு: செப்.14 வெளியீட்டுக்கான பணிகள் தொடக்கம்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துவந்த ‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றது. செப்டம்பர் 14-ம் தேதி வெளியீட்டிற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

‘துப்பறிவாளன்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சிதம்பரத்தில் நடைபெற்று வந்தது. விஷால் மற்றும் வினய் பங்கேற்ற சண்டைக்காட்சி ஒன்றை காட்சிப்படுத்தி வந்தார்கள். அதன் படப்பிடிப்பு முடிவடையவே, ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது.

படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, இறுதிக்கட்டப் பணிகள் கவனம் செலுத்த படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும், செப்டம்பர் 14-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்கள்.

விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், இயக்குநர் பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்திருக்கிறார்கள். அரோல் கொரேலி இசையமைத்து வரும் இப்படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்