இந்தாண்டு மியான்மரிலிருந்து தாய்லாந்துக்கு 75,000 தொழிலாளர்கள் சென்றுள்ளனர்.

 

கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை மியான்மரிலிருந்து வெளிநாடுகளுக்கு 84,425 பேர் வேலைக்காக சென்றுள்ளனர். இதில் தாய்லாந்துக்கு மட்டும் 75,048 பேர் சென்றுள்ளதாக மியான்மர் தொழிலாளர் மற்றும் குடிவரவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட 10,000 தொழிலாளர்கள் மியான்மரிலிருந்து தாய்லாந்துக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தாய்லாந்தில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் சட்டத்தினைக் கடந்த ஜூன் 23 ஆம் தேதி தாய்லாந்து ராணுவ அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து அடுத்த சில தினங்களுக்கு ஆவணங்களற்ற தொழிலாளர்களைப் பதிவுச்செய்யும் பணிகள் நடைபெற்றன. இதில் மியான்மர், லாவோஸ், கம்போடியாவைச் சேர்ந்த 183,000 தொழிலாளர்கள் முறையான ஆவணங்களுக்காக பதிவுச் செய்திருந்தனர். அதே சமயம் கைது நடவடிக்கைக்கு அஞ்சி ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தாய்லாந்தை விட்டு வெளியேறி இருந்தனர்.

இவ்வாறே மலேசியா முழுவதும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்