நடிகை ஓவியாவை மருமகளாக ஏற்றுக் கொண்டாரா ஆரவ்வின் அம்மா? : உண்மை இதுதான்..!

நடிகை ஓவியாவை மருமகளாக ஆரவ்வின் அம்மா ஏற்றுக் கொண்டதாக வெளியான செய்திகள் உண்மை இல்லை என்று அவரின் சகோதரர் கூறியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் நடிகை ஓவியா மற்றும் ஆரவ்.

ஓவியாவை மற்ற போட்டியாளர்கள் ஒதுக்கி வைத்த போது ஆரவ் ஆருதலாக இருந்து வந்தார். ஆரவ்வின் ஆருதலான பேச்சு, அவருடைய குணாதிசயங்கள் அனைத்தும் பிடித்து போனதால், ஓவியா காதலிக்க தொடங்கினார்.

ஆனால், தான் காதலிக்கவில்லை என்றும், தோழியாகவே நினைப்பதாகவும் ஆரவ் கூறியதால் ஓவியா மனமுடைந்தார். அதனால், போட்டியிலிருந்து வெளியேறுவதற்காக தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும் தான் ஆரவ்வை காதலிப்பதாக கமலஹாசன் மற்றும் அனைவரின் முன்னிலையில் சத்தமாக கூறினார். இந்த விஷயம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆரவ்விற்கு தெரியாது.

இந்நிலையில், ஓவியாவை தன்னுடைய மருமகளாக ஏற்றுக்கொண்டார் ஆரவ்வின் அம்மா என்று செய்திகள் வெளியாகின. சோஷியல் மீடியாக்களிலும் இதே பேச்சாக இருந்தது.

ஆனால், உண்மையில் ஆரவ்வின் அம்மா அப்படி கூறவில்லையாம். அவை அனைத்தும் வதந்தி என்று அவரது சகோதரர் பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்