வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சரின் இராஜினாமா தொடர்பில் நாளை உத்தியோக பூர்வ அறிவிப்பு???

-மன்னார் நிருபர்-
(13-08-2017)
வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது அமைச்சுப்பதவியில் இருந்து இராஜினாமா செய்வது தொடர்பில் நாளை (14) திங்கட்கிழமை உத்தியோக பூர்வ அறிவிப்பை விடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
-தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் தலைமைக்குழு நேற்று(12)   சனிக்கிழமை காலை வவுனியாவில் கூடி அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன் போது வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் கலந்துகொண்டிருந்தார்.
-குறித்த தலைமைக்குழு கூட்டத்தின் போது வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு வழிசமைக்கும் முகமாக அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு ரெலோ தலைமைக் குழு கோரியிருந்தது.
எனினும் உடனடியாக பதவி இராஜினாமாவிற்கு மறுப்பு தெரிவித்து வந்த அமைச்சர் பா.டெனிஸ்வரன் கால அவகாசத்தை கோரியிருந்தார்.
-இந்த நிலையில் கட்சியின் கோட்பாடுகளுக்கு அமைவாக தனது முடிவை இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பதாக அமைச்சர் குறித்த கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
எனினும் எவ்வித முடிவுகளையும் அமைச்சர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கவில்லை என தெரிய வந்தது.
இந்த நிலையில் அமைச்சரின் நிலைப்பாடு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் தொலைபேசியூடாக அமைச்சருடன் தொடர்பை ஏற்படுத்தி எழுப்பிய வினாவிற்கே அவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் பா.டெனிஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,,,
வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சரின் இராஜினாமா தொடர்பில் நாளை திங்கட்கிழமை உத்திகோக பூர்வமாக அறிவிக்கவுள்ளேன்.
வடக்கு முதலமைச்சரின் செயற்பாடுகள் குறித்து நான் கவலை அடைகின்றேன்.
கட்சியின் கோட்பாடுகளுக்கு அமைவாக எனது உத்தியோக பூர்வ அறிவிப்பை நாளைய தினம் அறிவிக்கவுள்ளேன்.
என வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்ததாக மேலும் தெரிய வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்