தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் திருமலை மாவட்ட மக்கள் சந்திப்பு

(டினேஸ்)

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் திருமலை மாவட்ட மக்கள் சந்திப்பு திருமலை மட்டிக்கலியில் அமைந்துள்ள பல நோக்கு கூட்டுறவுச் சங்க ஒன்றுகூடல் மண்டபத்தில் திருமலை மாவாட்ட அமைப்பாளர் எஸ். தவராஜா தலைமையில்  (12) நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது அக்கட்சியின் தலைவரும் முன்னால் மீள் குடியேற்ற பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் உபதலைவர் சோமசுந்தரம் சிறீகரன் செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான எஸ்.வசந்தன் கட்சியின் பொருளாளர் கே. உதயகுமார்  மற்றும் கிரான் பிரதேச அமைப்பாளர் கே.பத்ம யோகன் யாழ், வன்னி முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர்கள் அத்துடன் தமிழ்த் தேசிய மாணவர் பேரவையின் நிறுவுனர் ஏ. ஜோன்சன் மற்றும் என். பிரணவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது கட்சியின் கொள்கை அடிப்படையிலான செயற்பாடுகள் பற்றியும் வடகிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான தீர்வுகள், கிழக்கில் தமிழ் முதலமைச்சரை தெரிவு செய்வதற்கான முயற்சிகளிலான அரசியல் நகர்வுகள் தற்போதய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் மக்கள் மத்தியில் உள்ள தீர்க்க முடியாத பிரச்சினைகள் சம்பந்தமானகவும் தற்கால அரசியிலில் தமிழரது பங்களிப்புக்கள் தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்