பொலிதீன் உற்பத்தியாளர்கள் பிரதமர் ரணிலைச் சந்திக்க ஏற்பாடு!

 

எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி தொடக்கம் பொலிதீன் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் தாங்கள் சந்திக்கவுள்ள பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவதற்கு தங்களுக்கு அவகாசமொன்றை வழங்குமாறு அகில இலங்கை பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
“இந்த அதிரடித் தடையால் பொதுமக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவதுடன், நாட்டின் இயல்புநிலை ஸ்தம்பிதமடையும். பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக்குப் பதிலாக மாற்றுவழியொன்றைக் கண்டுபிடிக்காமல் திடுதிப்பென இவ்வாறு தடைவிதிப்பது புத்திசாலித்தனமான காரியமல்ல.
இந்தத் தடை அமுலுக்கு வந்தால் கிட்டத்தட்ட 300 பொலிதீன், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தங்களது வியாபாரங்களை மூடவேண்டிவரும். அத்துடன், இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் ஒரு இலட்சம் பேர் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கவேண்டிவரும்”  என்று அச்சங்கத்தின் தலைவர் அநுர விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
……..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்