திருகோணமலை-மொறவெவ பிரதேச சில்லறைக்கடையொன்று தீப்பற்றியுள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-மொறவெவ பிரதேச சபைக்கு சொந்தமான  கட்டிடத்தில் இயங்கி வந்த சில்லறைக்கடையொன்று இன்று அதிகாலை  (16) 1-15 மணியளவில் தீப்பற்றியுள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள சில்லறை கடை தீப்பற்றி எரிவதாக மொறவெவ பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீப்பற்றியமைக்கான காரணம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லையெனவும் சீன வெடி மற்றும் தீப்பெட்டி அருகருகே அவ்விடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்