ஷிரந்தியிடம் மூன்றரை மணிநேரமும் ரோஹித்தவிடம் ஆறு மணிநேரமும் விசாரணை

குற்றப்புலனாய்வு பிரிவு முன்னிலையில் நேற்றைய தினம் ஆஜராகிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் சுமார் மூன்றரை மணிநேரம் சிறப்பு விசாரணை இடம்பெற்றுள்ளது.

செஞ்சிலுவைச் சங்கத்தினால் ஷிரந்தி ராஜபக்ஷவின் ‘சிரிலிய சவிய’ அமைப்புக்கு வழங்கப்பட்ட டிபண்டர் வாகனம் தொடர்பிலும் குறித்த வாகனம்த்தின் நிறம் மாற்றப்பட்டமை தொடர்பிலும் அவரிடம் விசாரணைகளை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை நேற்றைய தினம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில் ஆஜராகிய ரோஹித்த ராஜபக்ஷவிடம் சுமார் 6 மணிநேரம் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

சீனாவிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டதாக கூறப்படும் சுப்ரிட் செட் 1 என்னும் செயற்கைக் கோள் தொடர்பிலும் அதனுடன் தொடர்புடைய 320 மில்லியன் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இன்றைய தினம் யோஷித்த ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுப் பிரிவு முன்னிலையில் ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்