ரோஹித ராஜபக்ஷவும் விசாரணைப் பொறிக்குள்! – ஆதரவளிக்கக் களமிறங்கினார் கோட்டா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது மகனான ரோஹித ராஜபக்ஷவிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு (எவ்.சி.ஐ.டி.) நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தியது.
சீனாவின் உதவியுடன் ஏவப்பட்ட சுப்ரீம் செட்  1 செய்மதி விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி பற்றி வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு ஆதரவு வழங்கும் வகையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் எவ்.சி.ஐ.டி வளாகத்துக்குச் சென்றிருந்தார்.
முன்னாள் எம்.பிக்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட மஹிந்த அணி உறுப்பினர்களும் அங்கு சென்றிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்