அண்ணனும் தங்கையும் வீட்டில்செய்த காரியம்; நீங்களே பாருங்க

இந்த பாரிய சட்டவிரோத நடவடிக்கை, காலியில் உள்ள பிரபல பாடசலைக்கு அருகில் காணப்படும் சொகுசு வீடொன்றின் அறையில் இடம்பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி நகரில் சொகுசு வீடொன்றின் அறையில் ஹெரோய்ன்; போதைப் பொருளை பொதி செய்து, பாரியளவில் அதனை விற்பனை செய்து வந்த சகோதரனும், சகோதரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவல்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து, காலி காவல்துறை தலைமையகத்தின் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு, மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர்கள் இவ்வாறு நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பாரிய சட்டவிரோத நடவடிக்கை, காலியில் உள்ள பிரபல பாடசலைக்கு அருகில் காணப்படும் சொகுசு வீடொன்றின் அறையில் இடம்பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களிடமிருந்து 5 கிராம் மற்றும் 350 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனை விற்பனை செய்வதற்காக பொதி செய்யும் நடவடிக்கை, அந்த அறையில் இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள், காலி நீதிமன்றத்தில் இன்று (17) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்