சூடு பிடிக்கும் பிக்பாஸ் : இரண்டாவது நாளே சுஜா வருணியை அசிங்கப்படுத்திய காயத்ரி!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் புது வரவாக வந்திருப்பவர் குத்தாட்ட நாயகி சுஜா வருணி. இவர் பிக்பாஸ் வீட்டிலுள்ள மற்ற போட்டியாளர்களை ஒரு கை பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதைப் போலவே சுஜா வருணி வந்தது வீட்டிலிருந்த மற்ற போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை. அவரை ஆளாளுக்கு குறை கூற ஆரம்பித்து விட்டனர்.

வையாபுரியோ, இவர் என்ட்ரியை பார்க்கும்போது 4 சாவித்திரிக்கு சமமாக இருப்பார் போல தெரிகிறது என்கிறார்.

ஆரவிடம், நீ ஒழுங்காக என் கூடவே இரு, அதுதான் உனக்கு நல்லது என்று கூறுகிறார் காயத்ரி.

அதுமட்டுமல்லாமல் அவர் சினேகனிடம், சுஜா வருணி பயங்கரம். இவள் 4 ஜூலிக்கு சமம் என்கிறார். அதற்கு சினேகன் அய்யோ ஒரு ஜூலியையே சமாளிக்க முடியவில்லை.

இதில் நான்கு ஜூலியை எப்படி சமாளிப்பது என்கிறார். இந்நிலையில் கணேஷ் மட்டும் சுஜாவிடம் நல்ல விதமாக பழகுகிறார். இதனால் அவரை காயத்ரி மற்றும் சினேகன் ஆகியோர் கடுமையாக கிண்டல் செய்கின்றனர்.

இந்த செய்கையினால் காயத்ரி மேலும் ரசிகர்களிடம் வசமாக வாங்கி கட்டி கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் சுஜா வருகையில் பிக்பாஸ் வீட்டில் எதாவது மாற்றம் இருக்குமா என்று பொறுத்து இருந்தான் பார்க்க வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்