உதவி என்று கேட்ட போது கூடாத கூட்டம், இறந்த பின் ஆறுதல் சொல்ல அலைமோதும் நெரிசல்..!! கமல், ரஜினி மட்டும் தானா சினிமாதுறை..??

மதுரை அலங்காநல்லூர் ஏர்ரம் பட்டியை சேர்ந்த ராமரின் 3வது மகன் வாசுதேவன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. பட்டதாரி.

இவர் படிக்கும் காலத்தில் கதை வசனம் எழுதி தன் உடன் உள்ள மாணவர்களை வைத்து நடித்து காட்டுவார்.

சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தில் சென்னையில் தனது நண்பரின் நண்பர் R.P.திலக் என்பவரை பார்த்து அவருடன் பல முண்ணனி டைரக்டர்களிடம் உதவியாளராகவும் நடிகர், நடிகை, ஆகியோருடன் நடித்து தமிழக மக்களை சிரிக்க வைத்தார்.

தற்போது சாலி கிராமத்தில் 40 வருடங்களாக மனைவி அமுதாவுடனும் மகள் கிருஷ்ணவேணி வயது 12 உடனும் வாழ்ந்து வந்தவர்.

இப்போது முடியாமல் கடந்த 5 மாத காலமாக சென்னையிலும், மதுரையில் மருத்துவம் செய்துவந்தார்

தற்போது முனிச் சாலையில் உள்ள வீட்டில் மூச்சு திணறல் நோயால் அவதிபட்டு மிகவும் மோசமான நிலையில்இருந்துள்ளார்

இவரது மனைவி சில தினங்களுக்கு முன் கூறியது, தமிழகத்தை சிரிக்க வைத்த எனது கணவரை திரை துறையை சார்ந்தவர்கள் திரும்பி பார்க்க மறுக்கிறார்கள் என கூறி அழுது இருந்தார்..

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ருக்மணி பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

தற்போது அவர் மனைவி தனது ஒரு மகளை வைத்து என்ன செய்யப் போகிறேன் என்று புலம்பி வருகிறார்.

கமல், ரஜினி மட்டும் தானா சினிமாதுறை..!! இறந்த பின் வந்து ஆறுதல் சொல்வதில் என்ன பயன்? நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கும், தயாரிப்பாளர்களின் கோடி பிரச்சனையை தீர்ப்பதற்கு மட்டும் தானா??

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்