இந்த பிரபலம் காதும் காதும் வைத்தது போல் திருமணம் செய்ய காரணம் என்ன..?

தாஜ்மஹால் படம் மூலம் சினிமாவில் கால் பதித்தவர் ரியா சென். மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த அவர் பாலிவுட்டில் கவனம் செலுத்தினார். ஆனால் அவர் பெரிய அளவில் பேசப்படவில்லை.

அவர் தனது காதலரான ஷிவம் திவாரியை விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் புனேவில் காதும் காதும் வைத்தது போன்று நேற்று திருமணம் நடந்துள்ளது.

இருவீட்டார் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். 36 வயதாகும் ரியா சென்னின் அக்காவும், நடிகையுமான ரைமா சென்னுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இருவரின் திருமண புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்