என்னது நான்தான் அணிகள் இணைப்பிற்கு முட்டுக்கட்டை போட்டேனா? : கேபி முனுசாமி!

அணிகள் இணைய நான் முட்டுக்கட்டையாக இல்லை என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

ஆளும் அ.தி.மு.க மூன்றாக பிரிந்து டி.டி.வி.தினகரன், ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தலைமையில் இயங்கி வருகிறது. இதற்கிடையில் அ.தி.மு.கவில் தர்மயுத்தம் தொடங்கி உள்ளதாக ஓ.பி.எஸ் அறிவித்தார்.

இரு அணிகள் இணைய வேண்டுமெனில், ஜெ., மரணம் குறித்த நீதி விசாரணை, சசிகலா குடும்பம் அரசியலிலிருந்து வெளியேற்றம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

இதனையடுத்து இரு அணிகள் இணைய பேச்சுவார்த்தை நடைபெறுவதாக பலமுறை கூறப்பட்டும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதற்கு முன்னதாக டி.டி.வி.தினகரன் தரப்பை கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்திருந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதனால் தற்போது இரு அணிகள் இணைப்பு குறித்த ஆலோசனைகள் பரபரப்பாக தொடங்கியுள்ளன.

இதனிடையே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியாகும்

மேலும், முதலமைச்சரின் நீதி விசாரணையை ஏற்க முடியாது என்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது:

இரு அணிகள் இணைய நான் முட்டுக்கட்டையாக இல்லை என்றும், ஓ.பி.எஸ் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுவோம் என்றும் குறிப்பிட்டார்.

அதேசமயத்தில் அவர், தர்மயுத்தத்தின் மூலக்கரு நிறைவேற்றப்படவில்லை எனில், இரு அணிகள் இணைப்பு சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்