மெரினாவில் நேற்று எங்கே போனது 144 தடை உத்தரவு..? ஜெ.., சமாதியில் 5 பேருக்கு மேல் கூட்டம் போட்டார்கள் என்று அதிமுகவினரை பிடித்து உள்ளே போட்டிருக்கலாமே..!!

தமிழகத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது தமிழ் இளைஞர்களின் மெரினா போராட்டம்.

அதை வன்முறையின் மூலம் ஒடுக்கிய கையோடு, மெரினாவுக்கு 144 தடை உத்தரவும் கொண்டு வந்துவிட்டது சென்னை மாநகரக் காவல்துறை.

இந்திய தண்டனைச் சட்டம், 1973 பிரிவு 144 இன் படி, சட்டவிரோதக் கூடுதலை தடை செய்வதற்கு, நீதிமன்ற குற்றவியல் நடுவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் பிரிவு 144 அமல்படுத்தப்பட்டப் பகுதியில் சட்டவிரோதமாகக் கூடினால், இச்சட்டத்தின் பிரிவு 141 முதல் 149இன்படி, சட்டவிரோதமாகக் கூடியவர்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டு சிறை தண்டனை அல்லது தண்டத்தொகை விதிக்கப்படுகிறது.

மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்கவும், பாதுகாப்பு, பொது அமைதி, கலவர தடுப்பு உள்ளிட்ட நோக்கங்களுக்காகவும் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பட்டி 144 தடை உத்தரவுப் பிறப்பிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட நபருக்கு எதிராகவும்,குறிப்பிட்ட பகுதியிலும் 144தடை உத்தரவைப் பிறப்பிக்கலாம்.

மாவட்ட ஆட்சியர், தமதுஆளுகைக்குட்பட்ட எந்தவொருபகுதியிலும் 144 தடைஉத்தரவை பிறப்பிக்க முடியும்.

144 தடை அமலில் உள்ளபகுதியில், பொது இடங்களில் 5பேருக்கு மேல் கூடுவதுகுற்றம். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டால்,கூட்டத்தில் இருந்த அனைவருமே தண்டனைக்கு ஆளாவார்கள்.

சட்டம் இப்படி இருக்கும் போது, நேற்று அதிமுகவினருக்கு மட்டும் ஜெயா சமாதியில் அத்தனை பேர் கூட எப்படி அனுமதி கிடைத்தது.

நான்கு பேர் ஒன்று கூடி சென்றாலே அவர்களது கைபேசி வரை சோதனை செய்யும் காவல் துறை, இருப்பதிலேயே பயங்கரமான சமூக சீர்கேட்டை விளைவிக்கும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் பாராபட்சம் காட்டுவது ஏன்.

மக்களுக்கு மட்டும் தான் இந்த சட்ட திட்டங்களா, அரசியல் ஆளுமை மிக்கவர்கள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா..?

இது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. சட்டம் கடமையை சரிவர செய்திருந்தால் அதிமுகவினர் அத்தனை போரையும் பிடித்து கைது செய்திருக்கலாமே.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்