ஒரே அடியிலே எல்லா வாயையும் அடைச்சிபுட்டாரு..இனி எதை வெச்சு சண்டை வலிக்கிறது? : ஓபிஎஸ்ஸை கலாய்க்கும் நடிகை கஸ்தூரி..!

ஒரே அடியிலே எல்லா வாயையும் அடைச்சிபுட்டாரு. இனி எதை வெச்சு சண்டை வலிக்கிறது என்று ஓபிஎஸ்ஸை கலாய்க்கும் வகையில் நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக தற்போது தினகரன், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என்று மூன்று அணிகளாக பிரிந்து காணப்படுகிறது. இதனால், அதிமுகவின் பெயரை பயன்படுத்த தடை செய்த தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னத்தையும் முடக்கியது.

அதே நேரத்தில் அதிமுகவில் இணைய வேண்டுமென்றால், ஜெயலலிதாவின் மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் நிபந்தனை விதித்து வருகின்றனர்.

அதே போன்று தினகரனும் நீதி விசாரணை அமைக்க வேண்டும் என்று கடந்த திங்கட்கிழமை கோரியிருந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி ஓபிஎஸ்ஸை கலாய்க்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ஒரே அடியிலே அத்தனை வாயையும் அடைச்சுபுட்டாரு. இனி எதை வைச்சு சண்டை வலிக்கறது? மூடிட்டு மூணு இலையும் சேர்ந்தே ஆவணும்! என்று கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்