விமானத்தில் குடித்து விட்டு ரகளை செய்த இளம் பெண்

விமானத்தில் குடித்து விட்டு ஊழியர்களிடம் தவறான வார்த்தைகளால் பேசி ரகளை செய்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாண்டுகள் பிரிட்டிஷ் ஏர்வேஸில் பயணம் செய்யத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் லண்டனில் வசித்து வருபவர் மேக்னா குமார். சட்ட நிபுணரான இவர் கடந்த வாரம் லண்டனிலிருந்து கனடாவுக்குப் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்ய விமான நிலையத்துக்கு வந்தார்.

அங்கு அதிகளவில் மது அருந்திய பிறகு தள்ளாடியபடி விமானத்தில் ஏறி அமர்ந்த மேக்னாவை சீட் பெல்ட் அணியும் படி விமான ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், அதற்கு மறுத்த மேக்னா அவர்களைத் தவறான வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார்.

இதோடு போதையில், கனடாவுக்கு வந்து விட்டோமா எனவும் கேட்டுள்ளார்.

மேக்னா செயல் குறித்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட ஓடுபாதையில் செல்ல தயாரான விமானத்தை விமானி மீண்டும் புறப்படும் வாயிலை நோக்கி இயக்கினார்.

இதையடுத்து பொலிஸார் மேக்னாவை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தினார்கள்.

மேக்னாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து £4,500 அபராதமும், இரண்டாண்டுகள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்யத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்