சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடு தொடர்பில் அமைச்சர்கள் பலர் கடும் அதிருப்தி!

கடந்த இரண்டு வருடங்களாக சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குகளைக் கையாளும் விதம் குறித்து அமைச்சர்கள் பலர் தமது அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றனர்.
அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்கிய குழுவொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் நேரில் சந்தித்து கடந்த இரண்டு வருடங்களாக சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குகளை இழுத்தடித்து வருவதாகவும், அதன்மூலம் குற்றவாளிகளை சுதந்திரமாக நடமாடவிட்டிருப்பதாகவும் முறையிட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ஹரின் பெர்னாண்டோ, டி.எம்.சுவாமிநாதன், பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களது முறைப்பாடு தொடர்பில் சட்டமா அதிபருடன் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் அவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
………….

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்