மன்னார் பட்டித்தோட்டம் கிராம அலுவலகர் பிரிவில் மக்களுக்கு மன்னார் பொலிஸாரினால் இலவச மூக்கு கண்ணாடி வழங்கி வைப்பு.(படம்)

இலங்கை பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பட்டித்தோட்டம் கிராமத்தில் கடந்த மாதம் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவை எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில் இன்று (19) சனிக்கிழமை காலை முதல் குறித்த பகுதியில் மன்னார் பொலிஸாரின் ஏற்பாட்டில் தேவையுடையவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர  மற்றும் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரது வழி நடத்தலின் கீழ் மன்னார்  பட்டித்தோட்டம் கிராம அலுவலகர் பிரிவில் கடந்த மாதம் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவை எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
குறித்த பொலிஸ் நடமாடும் சேவையின் மூலம் மன்னார் தலைமையக பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தாராபுரம் கிழக்கு, தாரபுரம் மேற்கு, தாழ்வுபாடு, எழுத்தூர் மற்றும், கீரி,பட்டித்தோட்டம் ஆகிய ஐந்து கிரம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தினூடாக பெற்றுக்கொள்ள வேண்டிய சகல சேவைகளையும் தொடர்ச்சியாக பெற்றுக்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை (19) காலை மன்னார் பொலிஸாரின் ஏற்பாட்டில் விஸ்வ பராமி அமைப்பின் உதவியுடன் தேவையுடையவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோவின் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் கலந்து கொண்டு கண்ணாடிகளை வழங்கி வைத்தார்.
இதன் போது தேவையுடைய பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு இலவசமாக மூக்குக்கண்ணாடிகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்