பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் காத்தான்குடி விடுதி வீதிக்கான வடிகாண் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு

எம்.ரீ. ஹைதர் அலி
077 3681209
புதிய காத்தான்குடி விடுதி வீதியினை வடிகானுடனான வீதியாக அமைப்பதற்குரிய அங்கிகாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
இவ்வேலைத்திட்டத்திற்கான நிதியினை பெறுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான கௌரவ. அல்ஹாஜ். சட்டத்தரணி. ரவூப் ஹக்கீம் அவர்களினுடாக 98 இலட்சத்து ஐம்பதாயிரம் ருபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்ட வடிகாண்
வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.
மேலும், வடிகாண் அமைப்பதற்குரிய அங்கிகாரம் கிடைக்கப்பெற்று அதற்குரிய விலைமனுக்கள் கோரப்பட்டிருப்பதுடன், மிக விரைவாக இதனுடைய வேலைகள் ஆரம்பிக்கவிருக்கின்றன.
அத்துடன், இவ்வீதியினை காபட் வீதியாக செப்பணிடுவதற்கு ஏற்கனவே மாகாண சபையினுடைய ஐ ரோட் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு அதற்குரிய அனைத்து விதமான அங்கிகாரங்களும் கிடைக்கப் பெற்றிருப்பதனால் இந்த வீதியினை சிறந்த முறையில் வடிகாண் அமைந்ததாக செப்பனிட்டு 2018ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் இவ்வேலைத்திட்டம் பூர்த்தியாக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.
இவ்வீதியினை பார்வையிடுவதற்காக தொழிநுட்ப உத்தியோகத்தர்களுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் 2017.08.17ஆந்திகதி – வியாழக்கிழமை நேரில்சென்று பார்வையிட்டதுடன், ஆலோசனைகளையும். கருத்துக்களையும் பறிமாறிக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்