பள்ளி மாணவிகளை வைத்து ஆசிரியை செய்த செயல்: ரகசியமாக வீடியோ எடுத்த பெற்றோர்

இந்தியாவில் ஆசிரியை ஒருவர் பள்ளி மாணவிகளை வைத்து தனது இரு சக்கர வாகனத்தை கழுவ வைக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசாவின் அங்கூர் மாவட்டம், அமந்த்பூரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருபவர் சஞ்ஜூக்தா மஜ்ஹி.

இவர் அங்கு படிக்கும் இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு மாணவரை தன் கையில் இருக்கும் பிரம்பை வைத்து மிரட்டி தன்னுடைய இரு சக்கர வாகனத்தை கழுவும் படி கூறுகிறார்.

இச்சம்பவத்தை அங்கு படிக்கும் மாணவர் ஒருவரின் பெற்றோர் ரகசியமாக வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இது குறித்து ஆசிரியர் சஞ்ஜூக்தா மஜ்ஹி கூறுகையில், இது மாணவர்கள் ஆசிரியர்களுக்கு செய்யும் சேவை என்று தெரிவித்துள்ளார்.

வீடியோ காண இங்கே அழுத்தவும் ..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்