இனி செல்பி கிடையாதா…?? ஆண்ட்ராய்டு போன்களுக்கு வரும் புது எதிரி..!! முன் மற்றும் பின்பக்க கேமரா இரண்டும் ஒன்றாக இயங்கினால் என்ன ஆகும்..??

கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அறிமுகமானது நோக்கியா 8 ஸ்மார்ட்போன். இதில்  5.3 இன்ச் தொடுதிரை, கொரில்லா கிளாஸ், 4ஜிபி RAM மற்றும் 64ஜிபி ROM, 13+13 எம்பி டூயல் பின்பக்க கேமரா, 13 எம்பி முன்பக்க கேமரா, ஆண்ட்ராய்ட் நோகட் இயங்குதளம்,  என பல கவர்ச்சிகரமான அம்சங்கள் கொண்டது.

இதில் செல்ஃபி மோகத்தை மறக்கச் செய்யும் புதிய டெக்னாலாஜி இருப்பது தனித்துவமானது. அதற்குப் பெயர்தான் போத்தி .

அதாவது தற்போதுள்ள மொபைல்களில் முன்பக்க கேமரா அல்லது பின்பக்க கேமராவில் ஒன்றை மட்டுமே தான்  ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும்.

ஆனால், நோக்கியா 8 மொபைலில் பின்பக்கத்தில் உள்ள டூயல் கேமரா மற்றும் முன்பக்க கேமராவை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வசதியுடன் உருவாக்கபட்டுள்ளது

இந்த கைபேசியில்  எடுக்கும் போத்தி வீடியோவை ஒரே க்ளிக் மூலம் நேரடியாக யூடியூப் மற்றம் பேஸ்புக்கில் நேரடியாக  ஆக ஒளிபரப்பு செய்யும் வசதியும் உள்ளது.

இந்த போத்தி டெக்னாலாஜி அறிமுகமாகும் முதல் மொபைல் என்பதால் நோக்கியா 8 மொபைல் ப்ரீமியம் மொபைல் கஸ்டமர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இனி வரும் காலத்தில் செல்ஃபி மோகம் மறைந்து போத்தி மோகம் அதிகமாக இந்த கைபேசி ஆரம்பமாக அமையலாம் என கூறப்படுகிறது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்