நாளை இரண்டாவது போட்டி: வெற்றி பெற இலங்கையின் மாஸ்டர் பிளான் இதுதான்

நாளை இந்தியாவுக்கு எதிராக நடக்கவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்க இலங்கை அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இலங்கை பந்துவீச்சை இந்திய வீரர்கள் துவம்சம் செய்தனர்.

இந்நிலையில், நாளை நடைபெறும் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியில் முக்கிய மாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது.

இலங்கை அணி மேனேஜர் அசங்கா குருசின்ஹா கூறுகையில், முதல் போட்டியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு ஆல்ரவுண்டர்களுடன் களம் இறங்கினோம்.

ஆனால் கோஹ்லி மற்றும் தவான் அதிரடியால் பந்துவீச்சு பலிக்கவில்லை.

இதன் காரணமாக மொத்தம் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை நாளைய போட்டியில் களமிறக்கலாம் என ஒரு யோசனை உள்ளது என கூறியுள்ளார்.

ஆனாலும், மைதானத்தின் பிட்ச் தன்மையை பொருத்தே இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என் தெரிகிறது.

மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக துஷ்மண சேமேரா நாளைய போட்டியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்