புதிய புரட்சி படைக்கும் அப்பிள் நிறுவனம்!

தொழில்நுட்பத்தின் பாரிய வளர்ச்சியின் காரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இணையத்தளங்களிலேயே ஒளிபரப்பப்படும் நிலைக்கு மாறி வருகின்றது.

இதனைக் கருத்தில் கொண்டு திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், செய்திகள் என அனைத்தும் ஒன்லைன் ஊடாக பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை அப்பிள் நிறுவனமும் புதிதாக வெளியாகும் ஹோலிவுட் திரைப்படங்களை தனது பயனாளர்களுக்கு விரைவாக வாடைக்கு வழங்கும் வசதியினை ஏற்படுத்தவுள்ளது. இதற்காக ஹோலிவுட் ஸ்டூடியோக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றது.

தற்போதைய நிலையிலும் ஹோலிவுட் திரைப்படங்கள் ஒன்லைனில் கிடைக்கின்ற போதிலும் அதற்கு நீண்ட காலம் எடுக்கும்.

இப் படங்கள் வெளிவந்த சில வாரங்களிலேயே தரவிறக்கம் செய்யக்கூடிய வசதியையும் தருவதற்கு அப்பிள் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இவ் வசதியினை பெறுவதற்காக வாடிக்கையாளர் ஒருவர் மாதாந்த சந்தாவாக 30 தொடக்கம் 50 டொலர்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்