யாழ். பல்கலை மாணவன் மர்மக் காய்ச்சலால் மரணம்

இரண்டு நாட்களாக தொடர்ந்த மர்ம காய்ச்சலின் காரணமாக யாழ்.பல்கலைக் கழக மாணவன் ஒருவர் நேற்றைய தினம் திடீரென உயிரிழந்துள்ளார். வவுனியா, மதகு வைத்த குளம் பகுதியை சேர்ந்த வரும், யாழ். பல்கலைக்கழக
விஞ்ஞான பீட இரண்டாம் வருடத்தில்  கல்விகற்கும் மாணவனுமான  விஜயரட் ணம் லிந்துயன் (வயது 23) என்பவரே மேற் படி உயிரிழந்தவராவார்.
குறித்த மாணவன் கோண்டாவில் பகு தியில் உள்ள வீட்டில் நண்பர்களுடன் வாட கைக்கு தங்கியிருந்து பல்கலையில் கல்வி கற்று வருகிறார். கடந்த 18ஆம் திகதி இரவு காய்ச்சல் இருப்பதாக தெரிவித்து பனடோல் 2 குடித்து விட்டு நித்திரைக்கு சென்றுள்ளார்.
பின்னர் மறுநாள் 19ஆம் திகதி மாலை காய்ச்சல் மீண்டும் தொடர்ந்துள்ளது. அப் போது கோண்டாவிலில் உள்ள தனியார் மரு த்துவமனையில்  சில மாத்திரைகளை எடுத் துள்ளார். எனினும் காலையில் ஒவ்வாமை யால் வாந்தி எடுத்துள்ளார்.
பின்பு நேற்றைய தினம் காலையும்  தொட ர்ச்சியான வாந்தியின் பின்னர் காலை7.30 மணியளவில்   மயங்கி விழுந்துள்ளார். உட னடியாக அவரை  யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு வந்து சேர்த்த வேளை அவரை பரிசோதித்த வைத்தியர் குறித்த மாணவன் உயிரிழந்து விட்டதாக தெரிவி த்துள்ளார்.
பிரஸ்தாப மாணவனுக்கு ஏற்பட்ட காய் ச்சல் காரணமாக இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு மாரடைப்பினால் உயிரிழந் துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரி விக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவனின் மரண விசாரணையை யாழ்.போதனா வைத் திய சாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமார் மேற்கொண்டது டன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்ப ட்டுள்ளது. இதேவேளை உயிரிழந்த மாணவனின் சகோதரியும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்