கட்டிய மனைவியை கூட பிரிந்து விடுவார்கள் ஆனால் இதைவிட்டு ஒருநிமிடம் கூட பிரிய மாட்டார்கள் : ஆய்வில் அதிர்ச்சி..!!

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அதனை பிரிய நேரும்போது இனம் புரியாத தவிப்பு அவர்களுக்குள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது :

ஸ்மார்ட்போன் என்பது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கம் ஆகிவிட்டது.

ஒவ்வொருவரும் அதனை தனது சொந்த நினைவுகளை உள்ளடக்கியதாகவும், தனது தனிப்பட்ட அடையாளமாகவே பார்க்கும் மனப்பாங்கும் பரவலாக அதிகரித்து விட்டது.

இதனால் அவர்கள் ஸ்மார்ட்போனுடன் மிக நெருக்கமாகி தங்களது பிம்பமாகவே அதனை பார்க்க தொடங்கிவிட்டனர்.

ஸ்மார்ட்போனை பயன்படுத்தி எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொண்டு நேரடியாக பேசவும் கேட்கவும் முடியும் என்பதால், திடீரென அது இல்லாத நிலை ஏற்படும்போது அவர்களுக்குள்ளே உள்ளூர ஒருவித பதற்றம், இனம் புரியாத தவிப்பு ஏற்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு, “நோமோஃபோபியா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

முந்தைய ஆய்வுகளில், ஸ்மார்ட்போன் இல்லாத நிலையில், இதயத் துடிப்பு அதிகமாவது, கவலை, இரத்த அழுத்தம் மற்றும் மகிழ்ச்சியற்ற சூழல் ஆகியவை ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வு “சைபர்சைக்காலஜி, பிஹேவியர் மற்றும் சோஷியல் நெட்வொர்க்கிங்’ இதழில் வெளியாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்