60 இதய அறுவை சிகிச்சைகள்: உயிருக்கு போராடும் நிலையிலும் சாதிக்கும் சிறுவன்

பாதி இதயம் மட்டுமே துடிக்கும் நிலையில் 60 இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட பிறகும் சிறுவன் ஒருவன் குத்துச்சண்டை போட்டியில் சாதித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Somerset கவுண்டியை சேர்ந்தவர் Patricia (31). இவருக்கு Lucas (7) Isaac (7) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இருவரும் இரட்டையர்கள் ஆவார்கள்.

Lucas-க்கு பிறக்கும் போதே இதயத்தில் பெரியளவில் கோளாறு இருந்துள்ளது. அதாவது அவனின் பாதி இதயம் மட்டுமே துடிக்கும்.

இதுவரை 60 முறை பல்வேறு விதமான இதய அறுவை சிகிச்சைகள் Lucas-க்கு செய்யப்பட்டுள்ளது.

இவ்வளவு பிரச்சனைகளை மீறி சிறுவனுக்கு குத்துச்சண்டை போட்டி என்றால் அவ்வளவு பிரியம். தனது சகோதரன் Isaac குத்துசண்டை பயிற்சிக்கு போவதை பார்த்து Lucas-க்கும் ஆசை வந்துள்ளது.

ஆனால், அவன் உடல்நிலையை கணக்கில் கொண்டு முதலில் Patricia சம்மதிக்காத நிலையில், Lucas-க்கு எப்போது வேண்டுமானாலும் எதாவது நடக்கலாம் என அவனின் ஆசைக்கு பின்னர் சம்மதித்துள்ளார்.

தற்போது வாரத்துக்கு ஒருமுறை Isaac-யுடன் குத்துச்சண்டை பயிற்சிக்கு Lucas செல்கிறான்.

தனது திறமையால் குத்துச்சண்டை போட்டியில் ஆரஞ்சு பெல்ட்டை Lucas வென்றுள்ளான்.

அதிகமாக அவன் விளையாடக் கூடாது என மருத்துவர்கள் ஒருபக்கம் எச்சரித்துள்ளனர். Patricia கூறுகையில், Lucas-க்கு பாதுகாப்பான சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவனை இன்று வரை வாழ வைத்திருக்கும் மருத்துவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்