என்ன ஆச்சு பேஸ்புக் வலைத்தளத்திற்கு? : அடுத்தடுத்து முடக்கத்தால் கவலையில் மார்க்!

பேஸ்புக் சமூக வலைதளம் நேற்று முன் தினம் திடீரென்று முடங்கியதால் இதுகுறித்து மார்க், தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் அளித்தார் என்பது தெரிந்ததே.

இந்நிலையில் இன்று மீண்டும் திடீரென பேஸ்புக் முடங்கியதால் அதன் பயனாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள பேஸ்புக் பயனாளிகள் தங்கள் பேஸ்புக் கணக்கில் லாக் இன் செய்யும்போது, வலைத்தளத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் பேஸ்புக் சர்வர்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்போது லாக் இன் செய்யும்போது, பேஸ்புக் விரைவில் வழக்கமான வகையில் செயல்படும், தளத்தை மேம்படுத்தும் பணி நடைபெறும்போது உங்கள் பொறுமைக்கு நன்றி என்ற வாசகங்கள் பேஸ்புக் பக்கத்தில் தோன்றியதாக வாடிக்கையாளர் பலர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்