பிரெக்சிற் – மென்போக்கை கடைப்பிடிக்க கோரிக்கை

பிரெக்சிற்றுக்கான பேச்சுவார்த்தை பிரஸல்ஸில் மீண்டும் நடைபெறவுள்ள நிலையில், மென் போக்கைக் கடைப்பிடிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரித்தானியா கோரியுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, வர்த்தகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன என பிரெக்சிற் செயலாளர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

குடிமக்களின் உரிமைகள், அயர்லாந்து எல்லை, பிரிவதற்கான சட்டமூலம் ஆகிய விடயங்கள் தொடர்பில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

இதற்கான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையின்போது, எந்தவித திருப்புமுனையும் ஏற்படாது எனவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் பிரித்தானியா பிரிந்து செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்