சொறிக்கல்முனை பங்கு தந்தை ஒரு சாதனையாளர் – மட்டு. ஆயர் பாராட்டு

சொறிக்கல்முனை பங்கு தந்தை அருட்பணி சு.திருட்செல்வம் ஓர் சாதனையாளர் என மட்டு. நகர் ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சொறிக்கல்முனை திருத்தலத்தில் முதல் நன்மையும் உறுதிப்பூசுதல் திருவருட்சாதனங்களை வழங்குதலும், புதிதாக அமைக்கப்பட்ட குரு மனையையும் காரியாலயத்தையும் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கூறுகையில்,

சொறிக்கல்முனை பங்கு தளத்தின் மிக நீண்ட நாள் தேவையாக இருந்த ஒரு புதிய குரு மனையும், காரியாலயமும் இன்று பூர்த்தி செய்யப்படுகின்றது.

இதனை கட்டி முடிப்பதற்கு பலரும் பல வழிகளில் உதவி செய்துள்ளனர். பண வடிவிலோ, சேவை வடிவிலோ, உடல் மற்றும் உழைப்பு வடிவிலோ, செப உதவியாகவோ தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

விசேட விதமாக சொறிக்கல்முனை பங்கு மக்கள் தங்கள் பங்களிப்பை காத்திரமான முறையில் வழங்கியுள்ளனர். சொறிக்கல்முனை பங்கு மக்கள் பொருளாதாரத்திலும், ஆன்மீகத்திலும் கல்வியிலும் தொடர்ந்து முன்னேற தனது ஆசியை வழங்குவதாக ஆயர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அருட்பணி சு.திருட்செல்வம் கூறுகையில்,

இறைவனின் ஆசீராலும், ஆயரின் வழிகாட்டலினாலும் குருக்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள், பக்தர்களின் ஒத்துழைப்பாலும் இன்று ஓர் கனவு நனவாகின்றது.

இந்த திருச்சிலுவை திருத்தலத்தை நோக்கி இலங்கையின் பல பாகங்களில் இருந்து இன, மொழி, சமய வேறுபாடின்றி பக்தர்கள் வருகை தருகின்றார்கள்.

எனவே இந்த திருத்தலத்திற்கு ஓர் காரியாலயமும் குரு மனையும் அமைந்திருக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இதற்கான அத்திவாரத்தினை முன்னை நாள் பங்குதந்தை அருட்பணி யேசுதாசனால் இடப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்