20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தென் மாகாண சபையில் தோல்வி

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தென்மாகாண சபையில் இன்று 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் மாகாண சபையின் தவிசாளர் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பை நடத்தியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சபையிலிருந்து வௌியேறியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் செங்கோலை எடுத்து செல்ல முயற்சித்ததால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

தென்மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுமந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஒன்றிணைந்த எதிர்கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்