ஊதிய விகிதாசாரங்களை வெளிப்படுத்த பிரித்தானியாவில் புதிய சட்டம்

நிர்வாக அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் இடையிலான ஊதிய விகிதத்தை வெளிப்படுத்தும் வகையிலான புதிய சட்டமொன்று பிரித்தானியாவில் அமுலுக்கு வரவுள்ளது.

அதன்படி, பணியாளர்களுடன் ஒப்பிடுகையில், தலைமை நிர்வாகிகள் சராசரியாக எவ்வளவு அதிகமாக பெறுகின்றனர் என்பதை நிறுவனங்கள் வெளியிட வேண்டும் என பிரித்தானிய அரசாங்க சீர்த்திருத்தங்களின் தொகுப்பின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நிர்வாக ஊதிய ஒப்பந்தங்கள் தொடர்பில் எதிர்ப்பை எதிர்கொள்ளும் நிறுவனங்கள் இப்புதிய திட்டத்தின் மூலம் பாதிப்பை எதிர்நோக்கும்.

மேலும், இத்திட்டமானது நிறுவனங்களை, ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்கள் மீது அதிக பொறுப்புள்ளவர்களாக எடுத்துக்காட்டும் என வர்த்தகச் செயலாளர் கிரெக் கிளார்க் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய பெருநிறுவன ஆளுகை சட்டமானது, எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் நடைமுறைக்கு வரவுள்ளது.

இச்சட்டத்தின்படி, முதலாளிமார் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான ஊதிய விகிதத்தை வெளிப்படுத்துமாறு சுமார் 900 பொது நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்