பெரஹெர ஊர்வலத்தில் சென்ற பெண்களின் ஆடையால் சர்ச்சை

மாத்தறை – சீனிகம விகாரையில் நடைபெற்ற பெரஹெர ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஐந்து பெண்கள் அணிந்திருந்த ஆடையால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

சீனிகம விகாரையின் பெரஹெர ஊர்வலத்தில் குறித்த பெண்கள் அணிந்திருந்த ஆடை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்து வேறுபாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறித்த ஐந்து பெண்களும், பௌத்த மதத்திற்குரிய கொடியை ஒத்த வகையில் அமைந்த சேலைகளை அணிந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளமையே இதற்கு காரணம் ஆகும்.

இந்த நிலையில், சீனிகம விகாரையின் உட்தரப்பு பிரச்சினை காரணமாகவே இந்த பெண்கள் இவ்வாறு பௌத்த மதம் சார்ந்த கொடி ஒத்த கொண்ட சேலையை அணிந்து ஊர்வலத்தில் செல்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் நடந்த தினத்திற்கு மறுநாள் தவறை திருத்திக் கொள்ளும் வகையில் பெண்கள் பொருத்தமான ஆடையை அணிந்து பெரஹெர ஊர்வலத்தில் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்