இறந்து போன மகளுடன் தவித்த சிங்கள தாய்க்கு, உதவிய தமிழ் இளைஞர்கள்!!

உயிரிழந்த ஒரே மகளின் உடலை நல்லடக்கம் செய்ய முடியாமல் தவித்த சிங்கள தாய் ஒருவருக்கு தமிழ் இளைஞர்கள் உதவிய சம்பவம் ஒன்று நுவரெலியா பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

நுவரெலியா வைத்தியசாலையில் தனது மகளின் சடலத்தை வைத்து கொண்டு “யாராவது முடிந்தால் இந்த சடலத்தை அரசாங்க செலவில் புதைத்து விடுங்கள். உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். என்னிடம் பேருந்தில் செல்வதற்கான பணம் மாத்திரே உள்ளது..” என தாய் ஒருவர் பல மணி நேரம் கண்ணீர் விட்டு அழுத நிலையில் காணப்பட்டுள்ளார்.

கடுகண்ணாவை பிரதேசத்தை சேர்ந்த பம்பரந்தே வணிகரத்ன என்ற 85 வயதான தாய் ஒருவருவரே இவ்வாறான நிலைக்கு முகம் கொடுத்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான 51 வயதான தனது ஒரே மகள் நிரோஷா பெரேரா என்பவரே உயிரிழந்துள்ளார். அந்த வயோதிப தாய் கூறுவதற்கமைய உயிரிழந்த மகளின் இரண்டு பிள்ளைகளும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகும்.

பலரிடம் உதவி கோரிய போதிலும் அந்த தாய்க்கு அவரது மகளின் சடலத்தை புதைப்பதற்கும் ஒருவரும் உதவவில்லை.

இந்த நிலையில் நுவரெலியா, கந்தப்பளை பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர்கள் சிலர் வேறு ஒரு உடலை பெற்றுக் கொள்வதற்காக வைத்தியசாலைக்கு வந்த போது இந்த வயோதிப பெண்ணை அவதானித்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் இணைந்து வைத்தியசாலை பொலிஸாரை அழைத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சடலத்தை புதைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்