இலங்கையில் 33 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்! பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உருக்கமான பதிவு

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் (James Dauris) வடக்கிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில் இன்று மன்னாருக்கு சென்றுள்ளார். இதில் தலைமன்னார் கடற்பரப்புக்கு சென்ற போது, 33 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்று அவருடைய நினைவிற்கு வந்துள்ளது.

இதை உடனடியாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

“நான் 1984ஆம் ஆண்டு இராமானுஜம் (RMS Ramanujam) அவர்களுடன் முதல்முறையாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் வருகை தந்து தலைமன்னாரில் இறங்கினேன்.

33 வருடங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் அதே இடத்தில்..” என தெரிவித்து சில புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்