போக்குவரத்தில் துன்பங்களை அனுபவித்து வரும் மக்கள்

 

புத்துவெட்டுவான் வீதி சட்டவிரோத செயற்பாடுகளால் மிக மோசமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், புத்துவெட்டுவான், மருதன்குளம், பழையமுறிகண்டி, ஐயங்கன்குளம், தேறாங்கண்டல் உள்ளிட்ட மிகவும் பழமை வாய்ந்த விவசாயக் கிராமங்களை இணைக்கும் பிரதான வீதியாகவும் கானப்படுகின்றது.

அத்துடன், ஏ-9 வீதியின் கொக்காவில் சந்தியிலிருந்து மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் கொத்தம்பியாகுளம் சந்தியில் இணைக்கும் சுமார் 23 கிலோ மீட்டர் நீளமான குறித்த வீதியின் 10 கிலோமீட்டர் வீதி கடந்த 2013 ஆம் ஆண்டில் பல மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீதி உரிய முறையில் புனரமைக்காமலும், மணல் அகழ்வுகள், கிரவல் அகழ்வுகள், மரக்கடத்தல்கள் என்பன இவ்வீதியூடாகவே வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதனால் இந்த வீதி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுவதாக பிரதேச வாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் எந்தவித போக்குவரத்து வசதிகள் கூட இல்லாத இந்தப் பகுதி மக்கள் பயணிக்கும் வீதியானது 13 கிலோ மீட்டர் நீளமான ஒரு பகுதி புனரமைக்கப்படாமலும், ஏற்கனவே புனரமைக்கப்பட்ட 10 கிலோமீட்டர் தூரம் சேதமடைந்த நிலையிலும் காணப்படுவதனால் இந்தப்பகுதி மக்கள் போக்குவரத்தில் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்