ஜனாதிபதி, பிரதமர், புதிய வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்ற பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும்.

இரண்டாவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று கொழும்பு வந்தார்.

இந்த நிலையில், இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடனும் இந்திய வெளிவிவகார அமைச்சர் முக்கிய சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.

      

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்